கதாநாயகன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் முக்கிய நடிகரான விஜயகுமார், தற்போது சீரியல் மற்றும் திரைப்படங்கள் என்று பிஸியாக நடித்துக் கொண்டிருக்க, முன்னணி இயக்குநர் ஒருவரது பேச்சை கேட்டு சுமார் ஆறு மாதமாக காத்திருந்த அவரை, அந்த முன்னணி இயக்குநர் கடுப்பேற்றியிருக்கும் தகவல் கசிந்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளதாம். கொரோனாவால் தடைபட்ட அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில், அப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிப்பதாக நம்பியிருந்த விஜயகுமார் பெரும் ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறாராம்.
முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விஜயகுமாருக்கு முக்கிய கதாப்பாத்திரம் இருப்பதாக கூறிய மணிரத்னம், அதற்காக அவரை தாடி வளர்க்க சொன்னாராம். அவரும் சுமார் ஆறு மாதமாக தாடி வளர்த்துக் கொண்டிருக்க, மணிரத்னத்திடம் இருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லையாம்.
இந்த நிலையில், விஜயகுமாருக்கு சொன்ன அந்த கதாப்பாத்திரத்தில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாம். இந்த தகவலை, காலதாமதமாக அறிந்துக்கொண்ட நடிகர் விஜயகுமார், இயக்குநர் மணிரத்னத்தை கரடு முரடான வார்த்தைகளால் திட்டி தீர்த்துவிட்டாராம்.

இப்போதும் இயக்குநர் மணிரத்னத்தின் பெயரை கேட்டால் கடுப்பாகும் நடிகர் விஜயகுமார், அவரை சகட்டு மேனிக்கு திட்ட தொடங்கிவிடுவதாகவும் கூறப்படுகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...