பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார், வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 98.
1944 ஆம் ஆண்டு இந்தி சினிமாவில் நடிகராக அறிமுகமான திலீப்குமார், ‘தேவதாஸ்’, ‘கங்கா யமுனா’, ‘ஆன்’, ‘தஸ்தான் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தர்.
வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த திலீப்குமாருக்கு கடந்த வாரம் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார், இன்று காலை காலமானார். இவருக்கு வயது 98.
திலீப் குமாரின் மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1944 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமான திலீப்குமார், 50 ஆண்டுகளில் 65 திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைத்துறைக்கான உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, மற்றும் மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...