சென்னையை சேர்ந்த தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியனும், திரிஷாவும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து பிறகு திருமணம் நின்று போனது. இதையடுத்து திரிஷா சினிமாவில் பிஸியாகிவிட்டார். வருண் மணியனுக்கும் வேறு ஒரு பெண்ணும் திருமணம் நிச்சயமாகிவிட்டது.
இதற்கிடையே, வருண் மணியனுக்கு தொலைபேசியில் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்ததால், அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு அவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், வருண் மணியனை அவரது அலுவலகத்தில் வைத்து இரண்டு பேர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் வசிக்கும் வருண் மணியனின், அலுவலகம் நந்தனத்தில் உள்ளது. நேற்று அலுவலக பணிகள் முடிந்து லிஃப்ட்டில் அவர் கீழே இறங்கும்போது, லிஃப்ட்டுக்குள் இருந்த 2 பேர் வருண்மணியனை ஸ்குருடிரைவரால் தாக்கியுள்ளனர். இதில் அவரது கை மற்றும் இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது. 4-வது தளத்தில் லிஃப்ட் கதவு திறந்தபோது அலுவலக ஊழியர்கள் ஓடிவந்து, தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரையும் மடக்கிப்பிடித்தனர். பிறகு அவர்கள் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சைதாபேட்டை போலீஸார் அந்த இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் வருண் மணியனை எதற்காக தக்கினார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...