2018 ஆம் ஆண்டு வெளியான கன்ன திரைப்படமான ‘கே.ஜி.எஃப் 1’ கன்னத்தில் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு இந்தி என பல மொழிகளில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான யாஷின் அதிரடி நடிப்பில், பிரசாந்த் நீலின் பிரம்மாண்ட இயக்கத்தில் வெளியான இப்படத்தின் வசூல் தென்னிந்திய சினிமாவையே வியப்பில் ஆழ்த்தியது.
மேக்கிங், ஆவேசமான வசனங்கள், அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் உள்ளிட்ட படத்தின் அத்தனை அம்சங்களும் திரையரங்குகளுக்கு மக்களை திரும்ப திரும்ப வரவைத்தது. இதையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியது.
முதல் பாகத்தை காட்டிலும் கூடுதல் பிரம்மாண்டத்தோடும், முன்னணி நட்சத்திரங்களோடும் உருவாகியுள்ள இரண்டாம் பாகமான ‘கே.ஜி.எப் : சேப்டர் 2’ திரைப்படத்தில் ஹீரோ யாஷுடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் போன்ற பாலிவுட் பிரபலங்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நடிகர் பிரகாஷ்ராஜும் இப்படத்தில் நடித்திருக்கிறார்.
யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியான ‘கேஜிஎஃப்: சேப்டர்2’ படத்தின் டீஸர் 200 மில்லியன்களுக்கு மேல் பார்வையிடல்களைப் பெற்றுள்ளது. தென்னிந்திய சினிமாவில் இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுமைக்கும் ரசிகர்களை கொண்ட படங்களாக பாலிவுட் படங்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில், அதனை மாற்றிய முதல் படமாக ‘பாகுபலி’ திகழ, அப்படத்தை தொடர்ந்து, இந்தியா முழுவதும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பெற்ற தென்னிந்திய மொழித்திரைப்படமாக ‘கே.ஜி.எஃப் : சேப்டர் 2’ அமைந்துள்ளது.
ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியாக உள்ள ‘கே.ஜி.எஃப் : சேப்டர் 2’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...