Latest News :

’அண்ணாத்த’ படக்குழுவின் புதிய திட்டம்! - ரஜினிகாந்த் சம்மதிப்பாரா?
Friday July-09 2021

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, சதிஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டதால், படத்தின் ரிலீஸுல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் தீபாவளியையொட்டி வரும் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

 

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைவதற்கு முன்பாகவே முடிவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்தது. ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் படமாக்கிவிட்ட நிலையில், அவர் இல்லாத சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியதாகவும் தெரிவித்திருந்தது.

 

இந்த நிலையில், ‘அண்ணாத்த’ படத்தின் மீதமுள்ள காட்சிகளை படமாக்க விரைவில் படப்பிடிப்பை தொடங்க இருக்கும் படக்குழு மீண்டும் ரஜினிகாந்தை வைத்தும் சில காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளதாம்.

 

படத்தின் கதைக்களமான கொல்கத்தாவில் தான் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம். சுமார் 20 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு அதற்காக ஜூலை 12 ஆம் தேதி கொல்கத்தாவுக்கு செல்ல உள்ளனர். கொல்கத்தாவின் வெளிப்புறங்களில் நடக்க இருக்கும் இந்த படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினி மறுப்பு தெரிவித்தால், அரங்கத்திற்குள் வைத்து காட்சிகளை படமாக்கவும் முடிவு செய்துள்ளார்களாம்.

 

ஏற்கனவே ஐதராபாத்தில் கொல்கத்தா போன்று அரங்கம் அமைத்து ’அண்ணாத்த’ படப்பிடிப்பு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

7613

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery