காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் ஹாரர் கலந்த காமெடி படமான ‘கோஷ்டி’-யின் படப்பிடிப்பை முடிவடைந்தது. சுதன் சுந்தரம், ஜி.ஜெயராம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எஸ்.கல்யாண் இயக்குகிறார்.
இப்படத்தின் அனைத்து வசன காட்சிகளும் படமாக்கப்பட்ட நிலையில், படத்தின் புரோமோ பாடல் ஒன்று மட்டும், கொரோனா பரவல் காரணமாக படமாக்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து அரசு திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியதால், ‘கோஷ்டி’ படக்குழுவினர் அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் கடைபிடித்து, படத்தின் புரோமோ பாடலை படமாக்கி முடித்துள்ளனர். இதன் மூலம் ‘கோஷ்டி’ படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் நிறைவு பெற்றுள்ளது.

காஜல் அகர்வால் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, சுப்பு பஞ்சு அருணாச்சலம், மொட்ட ராஜேந்திரன், யோகிபாபு, சத்யன், ஊர்வசி, தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், ஶ்ரீமன், மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், லிவிங்ஸ்டன், மதன்பாபு, சந்தான பாரதி, நரேன், தங்கதுரை உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி ஆனந்த் கலையை நிர்மாணிக்க விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்கிறார். பில்லா ஜெகன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, விவேக், கு.கார்த்திக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...