தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமடைந்த அஷ்வின், தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் சாக்லெட் பாயாக உருவெடுத்து வருகிறார். சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் ‘குக் வித் கோமாளி’ மூலம் மக்களிடம் சென்றடைந்திருக்கும் அஷ்வினுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தாலும் கதை தேர்விலும், தயாரிப்பாளர் அல்லது இயக்குநர் பின்னணியிலும் கவனமாக இருக்கிறாராம்.
அதன்படி, தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஹரன்.ஏ இயக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் நடிக்க அஷ்வின் ஓகே சொல்லியிருக்கிறார்.
முக்கோண காதல் கதையான இப்படத்திற்கான கதாநாயகிகள் தேர்வு நடைபெற்று வந்த நிலையில், தற்போது லட்டு போல இருக்கும் அவந்திகா மற்றும் தேஜூ அஸ்வினி ஆகியோர் நாயகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் ஆடிசன் வைத்து தான் தேர்வு செய்தார்களாம். அவந்திகா பெங்களூரை சேர்ந்த மாடலாம்.

அஷ்வின், அவந்திகா, தேஜூ அஷ்வின் ஆகியோர் திரைக்கதைக்கும், காதல் காட்சிகளுக்கும் பலம் சேர்க்கும் வகையில் இருப்பதாக படத்தின் இயக்குநர் ஹரிஹரன்.ஏ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கதாநாயகிகள் கிடைத்த உடனே பூஜை போட்ட ’என்ன சொல்ல போகிறாய்’ படக்குழு படப்பிடிப்பை இம்மாதம் இறுதியில் துவங்க முடிவு செய்துள்ளனர்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...