’மாநாடு’ படப்பிடிப்பு முடிந்தது! - படக்குழுவினருக்கு பரிசளித்த சிலம்பரசன்
Saturday July-10 2021

வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் ‘மாநாடு’ ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலம்பரசன் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபு - யுவன் கூட்டணி என்றாலே ரசிகர்களிடம் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் நிலையில், இவர்களுடன் சிலம்பரசனும் இணைந்திருப்பதால் எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

 

இந்த நிலையில், ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இறுதிநாள் படப்பிடிப்பின் போது படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

 

Maanaadu

 

மேலும், ’மாநாடு’ படத்தில் பணியாற்றிய இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட 300 பேருக்கு நடிகர் சிலம்பரசன் விலை உயர்ந்த கை கடிகாரத்தை பரிசாக வழங்கி படக்குழுவினரை மகிழ்வித்தார்.

Related News

7618

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery