கொரோனா பரவல் காரணமாக திரையரங்கங்கள் மூடப்பட்டிருப்பதால் பல படங்கள் ஒடிடி தளங்களிலும் சில திரைப்படங்கள் தொலைக்காட்சிகளிலும் நேரடியாக வெளியாகி வருகிறது. அந்த வகையில், பெரும் எதிர்ப்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ‘வெள்ளையானை’ திரைப்படம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைத்த படங்களில் முக்கியமான திரைப்படமான ‘திருடா திருடி’, ‘பொறி’ ‘யோகி’ போன்ற படங்களை இயக்கிய சுப்பிரமணிய சிவா இயக்கத்தில், சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘வெள்ளையானை’ விவசாயிகளின் கண்ணீரையும், கோபத்தையும் நையாண்டித்தனமாகவும், நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறது.
கதையின் நாயகனாக சமுத்திரக்கனி நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆத்மியா நடித்திருக்கிறார். யோகி பாபு காமெடி கலந்த குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஈ.ராமதாஸ், இயக்குநர் மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும், மூத்த சினிமா பத்திரிகையாளரும், முன்னணி தொலைக்காட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவருமான வெற்றி இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவரைப்போல் சுமார் 30 பேர் இப்படத்தின் மூலம் நடிகர்களாக அறிமுகமாகிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.எல்.ரமேஷ் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
திரையரங்குகளில் வெளியாக இருந்த இப்படம் திரையரங்கங்கள் திறக்கப்படாத காரணத்தால் நேரடியாக சன் தொலைக்காட்சியில் நாளை (ஜூலை 11) மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...