Latest News :

கார் பந்தய வீராங்கனையாக உருவெடுக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்!
Tuesday July-13 2021

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியான நாயகியாக வலம் வரும் நடிகை நிவேதா பெத்துராஜ், கார் பந்தயங்களில் பங்கேற்று தன்னை சாகச நாயகியாக நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

அதன்படி, ‘மொமெண்டம் - ஸ்கூல் ஆப் அட்வான்ஸ் ரேசிங்’ (Momentum – School of Advance Racing) என்ற பயிற்சி பள்ளியில் கலந்துக்கொண்டு பார்முலா கார்பந்தயத்தின் முதல் கட்டப்பயிற்சியை நடிகை நிவேதா பெத்துராஜ் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

 

சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கும் நிவேதா பெத்துராஜ், தனது கார் பந்தய ஆர்வம் பற்றி கூறுகையில், “கார்களின் மீதான காதல், பள்ளிக்கு சென்ற சிறுவயதிலேயே ஆரம்பித்துவிட்டது. நான் 8 வது படித்துகொண்டிருக்கும் போது எங்கள் வீட்டின் அருகில் வசித்த எனது அத்தை ஒருவர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார்கள். அப்போதிலிருந்தே ஸ்போர்ட்ஸ் கார் மீது தீவிர ஆர்வமும், வேட்கையும் என்னுள் உருவாகிவிட்டது. என்னுள் பல வருடங்களாக நீடித்திருந்த இந்த வேட்கையில் 2015 ல்  “Dodge Challenger”  ஸ்போர்ட்ஸ் காரை மிக ஆசையுடன் வாங்கினேன். UAE  நாட்டில் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கிய இரண்டாவது பெண் நான் தான். ஆனால் இந்த காரில் மிக வேகமாக போகக்கூடிய  V6 Engine இருந்ததை, எனது தந்தை விரும்பவில்லை. ஆனால் நான்  மிக நம்பிக்கயுடனும், உறுதியுடனும் அந்த காரை ஓட்டினேன். அது மிக அற்புத அனுபவமாக இருந்தது. அதைத்தொடர்ந்து துபாயில், F1, மற்றும்  Lexus, Rolls Royce, Chevrolet போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் Dubai Motor shows க்களில் கலந்துகொண்டு வேலை செய்தேன். இது கார்களின் மீதான எனது காதலை இன்னும் அதிகமாக்கியது. 

 

நான் சென்னை வந்த பிறகு, சென்னையில் சில Motor tracks களை சென்று பார்வையிட்டேன். ஆனால் அப்போது ஒரு போதும், நானும் ரேஸ் டிராக்கில் கார் ஒட்டுவேன் என நினைத்து பார்க்கவில்லை. ஒரு விளம்பர நிகழ்வை ஒட்டி BMW நிறுவனம் நடத்திய,  அந்த வார சிறப்பு காரை ஓட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட போது கார்களின் மீதான காதல் என்னுள் மீண்டும் துளிர்த்தது. கோயம்புத்தூரில் உள்ள Momentum  - School of Advance Racing கிற்கு எனது சகோதரருடன் சென்ற போது, அவர்கள் அளிக்கும் பயிற்சியை, என்னால் முடிக்க முடியுமா?, எனும் பயம் என்னுள் உருவானது. கார்களின் மீதான காதல் மற்றும் ஆர்வத்தால் மூன்று மாதம் முன்னதாகவே பயிற்சியில் சேர்ந்தேன். ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும் 8 பேர் கலந்துகொள்வார்கள் அதில் ஒரே பெண் நான் தான். Tracks ல் கலந்துகொண்ட அனுபவம் இருந்ததால் கார் ஓட்டும்போது எனக்கு நம்பிக்கை கூடியது. முடிவில் காரை ஓட்டி முடிக்கும் எனது Lap timings என்னுடன் கார் ஓட்டிய ஆண்களுக்கு இணையாக இருந்தது. இது Motorsports ஆண்களுக்கானது மட்டுமல்ல பெண்களுக்கும் தான் என்கிற  மிகப்பெரிய தன்னம்பிக்கையை எனக்கு அளித்தது. நாகரீகம் இவ்வளவு முன்னேறிய காலத்திலும் பெண்களுக்கான  Formula 1 மற்றும் Formula 2 championships நடத்தப்படுவதில்லை. விரைவில் பெண்களுக்கான முறையான கார் பந்தயங்கள் நடைபெறும் என நம்புகிறேன். 

 

Actress Nivetha Pethuraj

 

சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துக்கொள்ள இப்போதே பல அழைப்புகள் வந்துகொண்டு இருக்கிறது. ஆனால், அதற்காக டிராக் பயிற்சியில் ஈடுபட நிறைய முதலீடு, அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு தேவைப்படும். திரையுலகில் நான் பிரபலமாக இருப்பதால் ஸ்பான்சர் பெறுவது மிக எளிது. மிக அதிக பணம் தேவைப்படும் போட்டி இது. ஒவ்வொரு போட்டிக்கும் 15 லட்சம் வரை பணம் தேவைப்படும். ஆதலால், நான் முழுதாக தயாரான பிறகு, நான் ஆசைப்பட்டால் மட்டுமே சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துக்கொள்வேன். 

 

இப்போதைக்கு, எனது முழு கவனமும் அடுத்தடுத்த நிலைகளில் உள்ள பயிற்சிகளை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதில் தான் இருக்கிறது.” என்றார்.

Related News

7622

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery