தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான என்.லிங்குசாமி, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படம் ஒன்றை இயக்குகிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இப்படத்தில் பிரபல தெலுங்கு இளம் நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்க, நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஆதி பின்னிஷெட்டி, நதியா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. முதல் நாள் படப்பிடிப்பில் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநர் லிங்குசாமியின் சகோதரருமான திருப்பதி பிரதர்ஸ் என்.சுபாஷ் சந்திரபோஸ் கலந்துக்கொண்டு, கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, அன்பறிவ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கின்றனர். சாய் மாதவ், புரரா, பிருந்தா சாரதி ஆகியோர் வசனம் எழுதுகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரம்மாண்டமான முறையில் உருவாகும் இப்படத்தின் தமிழக உரிமையை மாஸ்டர் பீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...