தயாரிப்பாளர் எஸ்.பி.செளத்ரிக்கு பிறந்தநாள்! - வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள்
Thursday July-15 2021

பிரபல குழந்தைகள் நல மருத்துவரான எஸ்.பி.செளத்ரி, தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் அவர் தயாரித்த ‘ஏ1’ மற்றும் ‘டகால்டி’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

 

ஜூனியர் சாவித்ரி என்று அழைக்கப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் ‘டிரைவர் ஜமுனா’ என்ற படத்தை டாக்டர்.எஸ்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார். பிரம்மாண்டமான முறையில் உருவாகும் இப்படம் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகி வருகிறது.

 

இப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுடன் கைகோர்த்து பல பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள டாக்டர்.எஸ்.பி.செளத்ரி, இன்று தனது பிறந்தநாளை கொண்டாட, அவருக்கு திரை பிரபலங்கள் பலர் நேரிலும், சமூக வலைதளம் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

அதன்படி, ”’டிரைவர் ஜமுனா’ படம் மூலம் மூன்று மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கப்போகும் தயாரிப்பாளர் எஸ்.பி.செளத்ரி சாரின் வெற்றிகள் தொடர வேண்டும்” என்று கூறி அவருக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Producer SP Choudhry

 

மேலும், நடிகரும் இயக்குநருமான சசிகுமார், நடிகர்கள் சந்தானம், யோகி பாபு, ஆடுகளம் நரேன், லொள்ளு சபா மாறன், சுவாமிநாதன், தங்கதுரை, மனோகர், இயக்குநர் ராம்பாலா, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி, தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் சிவா, பெப்சி சிவா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர், தயாரிப்பாளர் டாக்டர்.எஸ்.பி.செளத்ரி சார் நீடுழி வாழ வேண்டும் என்றும், பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்றும், வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Related News

7628

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery