தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியின் 100 வது நாள் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதில் பெறப்போவது யார்? என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆரவ், கணேஷ் வெங்கட்ராம், பிந்து மாதவி, சினேகன் மற்றும் ஹரிஷ் என இந்த ஐந்து போட்டியாளர்களில் வெற்றியாளர்கள் யார்? என்பதற்கான வாக்கெடுப்பு நடந்து வருகிறது.
இந்த நிலையில், பிக் பாஸின் போட்டியாளரான நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், சினேகனுக்கு தனது ஆதரவை தெரிவித்ததோடு, “சினேகனுக்கு வக்களியுங்கள்” என்று சப்போர்டும் செய்து வருகிறார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி, “சினேகனுக்கு அதிக வாக்குகள் கிடைப்பது போல் தெரிகிறது. எனது ஆதரவும் அவருக்கு தான். எனக்கு அவர் நல்ல நண்பர். எனக்கு பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் உறுதுணையாக இருந்திருக்கிறார். எனக்கு எப்போதுமே ஆதரவாக இருந்தவருக்கு, தற்போது நான் ஆதரவளிக்கிறேன். அவருக்கு வாக்களியுங்கள்." என்று தெரிவித்துள்ளார்.
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...