நட்டி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது
Friday July-16 2021

அறிமுக இயக்குநர் ஹாரூன் இயக்கத்தில், சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகும் படத்தில் நட்டி நாயகனாக நடிக்கிறார். ட்ரீம் ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

 

இப்படத்தில் நான்கு நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். இதற்காக முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். இவர்களுடன் நந்தினி, சாஷ்வி பாலா, ப்ரீத்தி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

 

கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்கிறார். சுதர்சன் படத்தொகுப்பு செய்ய, கலையை அருண் நிர்மாணிக்கிறார். சாண்டி நடன இயக்குநராக பணியாற்றுகிறார். டோரத்தி ஜெய் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, தயாரிப்பு மேற்பார்வையாளராக எம்.எஸ்.லோகநாதன் பணியாற்றுகிறார். மக்கள் தொடர்பாளர் பணியுடன், நிர்வாக தயாரிப்பு பணியையும் கே.எஸ்.கே.செல்வா கவனிக்கிறார்.

 

Natty

Related News

7634

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery