சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படம், நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டிடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும், சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான ‘அயலான்’ படத்தில் ஏகப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் அப்படம் முழுவதுமாக முடிவடைய பல மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. அதேபோல், சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பும் விரைவில் முடிய உள்ளதாம்.
இந்த படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் ஒரே நிறுவனத்தில் ஐந்து படங்கள் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலுக்கு சிவகார்த்திகேயன் மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகத நிலையில், அவருடைய அடுத்தப் படம் பற்றிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.
அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அசோக் என்பவர் இயக்க இருக்கும் படத்தில் தான் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தையும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறதாம்.
இந்த படத்தின் முழுமையான திரைக்கதை பணியை இயக்குநர் அசோக் முடித்துவிட்டதால், சிவகார்த்திகேயனும் இப்படத்திற்கான தேதிகளை ஒதுக்கி கொடுத்து விட்டாராம். இதனால், சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...