கிளாசிக் காமெடி திரைப்படமான ‘காசேதான் கடவுளடா’ படத்தை தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு இயக்குநர் ஆர்.கண்ணன் ரீமேக் செய்கிறார். இதில், ஹீரோவாக மிர்ச்சி சிவா நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். இவர்களுடன் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, யோகி பாபு, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்குவதோடு, தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் சென்னையில் துவங்கியது. கண்ணன் இசையமைக்கும் இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
’ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’, ‘இவன் தந்திரன்’, ‘பூமராங்’, ‘பிஸ்கோத்’, மற்றும் விரைவில் வெளியாக உள்ள ‘தள்ளிப் போகாதே’, ’எரியும் கண்ணாடி’ என இயக்குநர் ஆர்.கண்ணன் இதுவரை 10 படங்களை இயக்கியிருக்கிறார். ‘காசேதான் கடவுளடா’ அவர் இயக்கும் 11 வது படமாகும்.

இந்த பத்து திரைப்படங்களிலும் வெவ்வேறு நடிகைகள் தான் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இதுவரை எந்த ஒரு படத்திலும், தனது படங்களில் ஏற்கனவே நடித்த நடிகைகளை மீண்டும் நாயகியாக இயக்குநர் கண்ணன் நடிக்க வைத்ததில்லை. முதல் முறையாக பிரியா ஆனந்தை தான் இரண்டாவது முறையாக தனது படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
கண்ணன் இயக்கத்தில் வெளியான ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் நாயகியாக நடித்திருந்த பிரியா ஆனந்த், அவருடைய ‘காசேதான் கடவுளடா’ படத்தில் நாயகியாக நடிப்பதன் மூலம், இயக்குநர் கண்ணன் படத்தில் இரண்டாவது முறையாக நாயகியாக நடிக்கும் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...