வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதியின் புதிய படத்திற்கு ‘தேஜாவு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மிஸ்டரி திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் பஸ்ட் லுக்கை அருள்நிதி பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜூலை 21) படக்குழு வெளியிட்டுள்ளது.
மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்குகிறார். வைட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்வதோடு, தனது பிஜி மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் மூலம் இணை தயாரிப்பு பணியையும் பி.ஜி.முத்தையா கவனிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, அருள்.இ சித்தார்த் படத்தொகுப்பு செய்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நவீன் சந்திரா நாயகனாக நடித்து வருகிறார்.
தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

பஸ்ட் லுக்குடன் படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்ட படக்குழு, ‘தேஜாவு’ என்பதற்கான அர்த்தத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...