அருள்நிதியின் 15 வது திரைப்படத்தின் முழு உரிமையையும் பிரபல திரைப்பட விநியோக மற்றும் தயாரிப்பு நிறுவனமான சக்தி பிலிம் பேக்டரி கைப்பற்றியது குறித்து சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். தனது விளம்பர யுக்தி மற்றும் தரமான திரைப்படங்களை தேர்வு செய்து வெளியிடுவது உள்ளிட்டவைகளால் சக்தி பிலிம் பேக்டரின் பி.சக்திவேலன், வெளியிடும் படங்கள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், அருள்நிதியின் படத்திற்கும் தற்போது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் அருள்நிதியின் பிறந்தநாளையொட்டி அப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் டைடில் நேற்று வெளியிடப்பட்டது. படத்திற்கு ‘டி பிளாக்’ (D Block) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் ‘டி பிளாக்’ படத்தின் பஸ்ட் லுக்கை வெளியிட்டார்.

’எரும சாணி’ யூடியுப் சேனல் பிரபலம் விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தனது எம்.என்.எம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றியுள்ள சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருப்பதோடு, படத்தினை மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...