போலீஸ் பயிற்சியின் சுவாரஸ்யங்களை சொல்லும் ‘டாணாக்காரன்’
Friday July-23 2021

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் ‘டாணாக்காரன்’ படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் இயக்குகிறார். இவர் இயக்குநர் வெற்றிமாறனிடம் ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ ஆகிய படங்களை இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

 

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ‘நெடுநல்வாடை’ படத்தில் நாயகியாக நடித்த அஞ்சலி நாயர் நடிக்கிறார். இவர்களுடன் லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

 

சமீபத்தில் வெளியான ‘டாணாக்காரன்’ பட டீசர் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருப்பதோடு, திரையுலகினரிடமும் பாராட்டு பெற்றுள்ளது.

 

இப்படம் குறித்து இயக்குநர் தமிழ் கூறுகையில், “போலீஸ் பயிற்சியில் உள்ள வாழ்க்கையை சொல்லும் படம் இது. கல்லூரி மாணவர்களுக்கு நிகராக போலீஸ் பயிற்சியில் சேரும் மாணவர்களின் வாழ்க்கையிலும் பல சுவாரஸ்யங்கள் உண்டு. வழக்கமான போலீஸ் படமாக இல்லாமல் வித்தியாசமான கோணத்தில் இந்தப் படம் இருக்கும். எனக்கு ஏராளமான போலீஸ் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் பகிர்ந்த அனுபவங்களை சினிமாவுக்காக சில மாற்றங்கள் செய்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியான பொழுதுப்போக்கு படமாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையான உழைப்புக் கொடுத்து நடித்துள்ளார் விக்ரம் பிரபு. இந்தப் படம் விக்ரம் பிரபு சினிமா கேரியரில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும். இந்தப் படத்தின் படப்பிடிப்பை வேலூர் மாவட்டத்தில் ஒரே கட்டமாக நடத்தி முடித்தோம். தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகளும் முடிவடைந்துள்ளதால் படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்” என்றார்.

 

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சந்துரு படத்தொகுப்பு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். ராகவன் கலையை நிர்மாணிக்க, சாம் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஷெரீப் நடனம் அமைத்துள்ளார்.

 

’மாயா’, ‘மாநாகரம்’. ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்களை தொடர்ந்து பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத், ஆர்.தங்க பிரபாகரன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

Related News

7647

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery