சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அரண்மனை’ படத்தின் இரண்டு பாகங்களை தொடர்ந்து மூன்றாம் பாகம் மிக பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ளது.
ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முழுமையாக முடிவடைந்த நிலையில், கிராபிக்ஸ் காட்சிகளின் பணி நடைபெற்று வந்தது. தற்போது கிராபிக்ஸ் பணி உள்ளிட்ட படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து படம் வெளியீட்டுக்கு தயராகி விட்டது. இதையடுத்து இயக்குநர் சுந்தர்.சி வெளியீட்டு பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார்.
இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் உருவாக்கிய பிரமாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாட்கள் படமாக்கப்பட்டது. படத்தின் அதி முக்கியமான, இந்த க்ளைமாக்ஸ் காட்சியின் CG பணிகள் மட்டுமே, 6 மாதங்கள் நடைபெற்றது. முந்தைய இரு படங்களை விட, பிரமாண்ட பட்ஜெட்டிலும், வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையுடனும் இப்படம் உருவாகியுள்ளது.
ஆவ்னி சினிமேக்ஸ் சார்பில் நடிகை குஷ்பு தயாரித்துள்ள இப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்துள்ளார். குருராஜ் கலையை நிர்மாணிக்க, பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...