பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம், அவரது 40 வது படமாக உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை மற்றும் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, படத்திற்கு ’எதற்கும் துணிந்தவன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் முதல் பார்வை விளம்பரத்தில் சூர்யா, மிகப்பெரிய கத்தியுடன் இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. எனவே, இப்படம் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சூர்யாவின் பிறந்தநாளான இன்று, அவருடைய 39 வது படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ‘ஜெய்பீம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், சூர்யா வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார். படத்தின் தலைப்பும், சூர்யாவின் கதாப்பாத்திரமும் இப்படத்தின் மீதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை, ’கூட்டத்தில் ஒருவன்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். ரஜிஷா விஜயன், மணிகண்டன் ஆகியோரும் இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது சூர்யா ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியடைய செய்த நிலையில், அவருடைய பிறந்தநாளையொட்டி அவரது 2 படங்களின் தலைப்பு மற்றும் முதல் பார்வை அடுத்தடுத்த வெளியானதால், சூர்யா ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், அவரது உறவினருமான மதிமாறன் புகழேந்தி ’செல்ஃபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்...
பிரபாஸ் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘தி ராஜா சாப்’...
கவின் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்த ‘மாஸ்க்’ திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ஓளிபரப்பாக உள்ளது...