அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ டீசர், போஸ்டர் என்று பலவற்றில் பல சாதனைகள் செய்து வருவது போல, பல சோதனைகளையும் சந்தித்து வருகிறது.
படத்தின் வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல், விஜயின் நேரடி தலையீட்டால் தீர்ந்த நிலையில், தற்போது படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் விதித்த தடையால், அக்டோபர் 3 ஆம் தேதி வரை படத்தின் விளம்பர பணிகளை தொடர முடியாமல் தயாரிப்பு தரப்பு இருக்க, மறுபுறம் ‘ஆளப்போறான் தமிழன்’ என்று தலைப்பை மாற்ற ஆலோசனை நடந்து வருவதாகவும் தகவல் பரவி வருகிறது.
ட்விட்டர் எமோஜி, டிரேட் மார்க் என்று இதுவரை எந்த ஒரு தென்னிந்திய மொழித்திரைப்படத்திற்கும் கிடைக்காத பெருமையை பெற்ர ‘மெர்சல்’ என்ற தலைப்பை மாற்றுவதாக வெளியான செய்திகளால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியிருக்க, இனிப்பு செய்தி ஒன்றை சொல்லி, மீண்டும் அவர்களை உற்சாகமடைய செய்துள்ளார் இயக்குநர் அட்லி.
படத்திற்கு ‘மெர்சல்’ என்ற தலைப்பு தான் இருக்கும், அதில் எந்தவித மாற்றமும் இல்லை, என்று தெரிவித்துள்ள இயக்குநட் அட்லி, ‘மெர்சல்’ என்ற தலைப்புக்கு டிரேட் மார்க் வாங்கிவிட்டார்கள், அதனால் தலைப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை. தலைப்பு மாற்றப்போவதாக வெளியாகும் செய்திகள் வெறும் வதந்தி தான், என்றும் கூறியுள்ளார்.
இயக்குநர் அட்லியின் இந்த அறிவிப்பால், விஜய் ரசிகர்கள் மீண்டும் உற்சாகமடைந்ததோடு, ’மெர்சல்’ மேலும் பல புதியசாதனைகள் செய்வதற்கான பணியிலும் ஈடுபட்டு விட்டார்களாம்.
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...