’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அப்படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். அதன் மூலம் அவருக்கு சில படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே காரில் சென்றுக் கொண்டிருந்த யாஷிகா ஆனந்த், பயங்கர விபத்தில் சிக்கியுள்ளார்.
இந்த விபத்தில், யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், யாஷிகா ஆனந்த், படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், யாஷிகா ஆனந்தின் இரண்டு நண்பர்களுடம் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களாம். மொத்தம் நான்கு பேர் இந்த கார் விபத்தில் சிக்கியுள்ளனர்.
கார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட கார் விபத்தில் சிக்கிய நான்கு பேரும் மது அருந்திவிட்டு காரை வேகமாக இயக்கி இருக்கலாம், என்று சந்தேகக்கிப்படுகிறது.
ப்ராமிஸ் என்ற சொல்லுக்கு சத்தியம், உத்திரவாதம் ,உறுதி என்ற பல்வகையான பொருள் படும்...
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தொடர்ந்து அடங்காத ப்ளாக்பஸ்டர் வெற்றிப் பாய்ச்சலுடன், மீண்டும் பாக்ஸ் ஆஃபிஸை அதிரவைக்க தயாராக உள்ளார்...
முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ’ஐ அம் கேம்’ (I Am Game) படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது...