தமிழ்த் திரைப்படங்கள் பல இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருவது போல், தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க பிற மொழி நடிகர், நடிகைகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதேபோல், பிற மொழி சினிமாக்களின் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலர், தங்களது வாரிசுகளை தமிழ் சினிமாவில் நடிக்க வைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த ராஜ்குமாரின் பேத்தி தன்யா ராம்குமார், விரைவில் தமிழ் சினிமாவில் நுழைய இருக்கிறார்.
நடிகர் ராஜ்குமாரின் மகள் வழி பேத்தியான தன்யா, ஏற்கனவே சில கன்னட திரைப்படங்களில் நடித்திருக்கும் நிலையில், விரைவில் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

காவிரி பிரச்சனை வரும்போதெல்லாம், தமிழர்களுக்கு தண்ணீர் தரக்கூடாது என்று போராடும் கன்னட நடிகர்களில் ஒருவரான ராஜ்குமார், தமிழ்நாட்டு மக்களுக்கு தண்ணீர் தரவில்லை என்றாலும், தமிழ்நாட்டு சினிமா ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தனது பேத்தியை தமிழ் சினிமாவுக்கு கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...