கோலிவுட் மற்றும் பாலிவுட்டை கடந்து ஹாலிவுட்டிலும் நடித்து வரும் தனுஷின், படங்கள் மீது ரசிகர்களிடம் மட்டும் அல்லாமல் திரையுலகினரிடமும் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும், அவருடைய 43 வது படத்தின் மீதும் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடக்கத்தில் தொடங்கி, ஐதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தனுஷின் பிறந்தநாளையொட்டி, டி43 என்று அழைக்கப்பட்ட அவருடைய படத்தின் தலைப்பும், படத்தின் முதல் பார்வையும் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

படத்திற்கு ‘மாறன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் முதல் பார்வையில் இடம் பெற்றுள்ள தனுஷின் புதிய தோற்றமும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இயக்குநர் ஜெ.கே.சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’...
இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ...
நல்ல கதையம்சம் கொண்ட தரமான கதைகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்றவர் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் கே...