வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெய், அவ்வபோது சில சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. ஆனால், தற்போது அவரைப் பற்றி வெளியாகியிருக்கும் தகவலால் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே அவரை பாராட்டி வருகிறது. அதிலும் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தரப்பில் ஜெய்க்கு தனி மரியாதையே ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில், பத்ரி இயக்கும் படத்தில் ஜெய் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. மிக ஆபத்தான சண்டைக்காட்சி என்பதால், பலத்தை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், ஒரு மேஜையை உடைக்கும் காட்சியின் போது, எதிர்பாராதவிதமாக, ஜெய் உடைய தோள்பட்டை இடம்பெயர்ந்தது. அவரைப் பரிசோதித்த பிசியோ தெரபி குழு, அவரை ஓய்வெடுக்க சொன்ன போதும், அதை பொருட்படுத்தாமல், படக்குழுவின் நலன் கருதி, மீதியுள்ள ஆபத்தான காட்சிகளையும் தானே முயன்று நடித்து முடித்துக் கொடுத்தார். இந்த தேதிகளை தவறவிட்டால், படக்குழு மீண்டும் இந்த இடத்தில் படபிடிப்பு நடத்துவதற்கான அனுமதியை பெற முடியாது, என்பதை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்தார். நடிகர் ஜெய் உடைய இந்த அர்பணிப்பை பார்த்து, மொத்த படக்குழுவும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தது.
கோபி நயினார் இயக்கத்தில் ஒரு படம், அட்லி கதை எழுதி தயாரிக்க, அவரது உதவியாளர் இயக்கும் படம் உள்ளிட்ட பல படங்களில் ஜெய் நடித்து நடித்து வருகிறார். அப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம்...
இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்...
அமேசான் மியூசிக், உன்னதமான இசையைக் கண்டடைந்த ஒரு புதிய ஆண்டைத் தொடங்கும் விதமாக, 2026 ஆம் ஆண்டு மற்றும் அதற்க்கும் மேலாக பல ஆண்டுகளாக தாக்கத்தை விளைவிக்கக் கூடியவர்களாக எதிர்பார்க்கப்படும் வளர்ந்துவரும் இசைக் கலைஞர்கள் அடங்கிய தனது ஸ்ட்ரீமிங் சேவைகளின் “அமேசான் மியூசிக்: 2026 கவனிக்கத்தக்க கலைஞர்கள்” வருடாந்திர பட்டியலை இன்று அறிவித்துள்ளது...