Latest News :

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரான பாவல் நவகீதன்!
Friday July-30 2021

எந்த கதாப்பாத்திரம் என்றாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் நடிகர்களில் பாவல் நவகீதனும் ஒருவர். ’மெட்ராஸ்’ படத்தில் விஜி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர், ‘குற்றம் கடிதல்’ படத்தில் வில்லத்தனம் கலந்த குணச்சித்திர வேடத்தில் மிரட்டினார். அப்படங்களை தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’ படத்தில் தமிழ் பேசும் வட இந்திய வாலிபராக நடித்து பாராட்டு பெற்றார்.

 

இப்படி எந்த ஒரு வேடமாக இருந்தாலும், தனது நடிப்பு மூலம், அந்த கதாப்பாத்திரமாகவே மாறிவிடும் நடிகரான பாவல் நவகீதன், அடிப்படையில் இயக்குநர் என்றாலும், அவருக்குள் இருக்கும் நடிப்பு திறமையால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராகியுள்ளார்.

 

’வட சென்னை’, ‘பேரன்பு’ ஆகிய படங்களுக்குப் பிறகு தனது கனவான படம் இயக்குவதில் பாவல் நவகீதன் கவனம் செலுத்தி, ஒரு படத்தை இயக்கினாலும், நடிகர் பாவல் நவகீதனை தமிழ் சினிமா விடுவதாக இல்லை. எனவே, ‘வலிமை’, ‘பூமிகா’, ‘டாணாக்காரன்’, ‘திட்டம் இரண்டு’, ‘நவரசா’ இணைய தொடர் என பல படங்களில் நடித்து முடித்திருப்பவர், ’ஸ்ரீதேவி சோடா சென்டர்’ என்ற தெலுங்குப் படத்தில் முக்கிய வில்லன் வேடத்திலும் நடித்திருக்கிறார்.

 

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘திட்டம் இரண்டு’ படம் வரும் ஜூலை 30 ஆம் தேதி நேரடியாக சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் பத்திரிகையாளர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் படம் பார்த்தனர்.

 

படம் பார்த்த அவனைவரும் பாவல் நவகீதனின் கதாப்பாத்திரத்தையும், அவருடைய நடிப்பையும் வெகுவாக பாராட்டி வருவதோடு, நாசர், ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்களைப் போல், அனைத்து வேடத்திற்கும் கச்சிதமாக பொருந்தும் நடிகராக பாவல் நவகீதன் இருப்பதாக, படத்தின் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

 

Thittam Irandu

 

பத்திரிகைகளின் இந்த பாராட்டினால் உற்சாகமடைந்திருக்கும் பாவல் நவகீதனிடம் படம் குறித்து கேட்ட போது, ”சிறிய வேடம், பெரிய வேடம் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. ஒரு காட்சி வந்தாலும், ரசிகர்கள் பேசும்படி நடிக்க வேண்டும், என்பது தான் என் எண்ணம். ‘திட்டம் இரண்டு’ படத்தின் கதை வித்தியாசமாக இருந்ததோடு, இதுவரை யாரும் சொல்லாத ஒரு கான்சப்ட்டாக இருந்ததாலும், என் வேடம் படம் பார்ப்பவர்கள் மனதில் நிற்கும் விதத்தில் இருந்ததாலும் நடித்தேன். நான் எண்ணியது போலவே இன்று படம் பார்த்த அனைவரும் என்னை பாராட்டுவதோடு, பத்திரிகைகள் என் கதாப்பாத்திரத்தையும், நடிப்பையும் குறிப்பிட்டு எழுதுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.

 

’வி1’ என்ற திரைப்படத்தை இயக்கிய பாவல் நவகீதன், மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், நடிகராக கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல், தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ’திட்டம் இரண்டு’ படத்தை தொடர்ந்து, இந்த வருடம் அவருடைய நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக இருப்பதோடு, பல புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார். 

 

எனவே, பத்திரிகைகளில் குறிப்பிட்டது போல், நாசர், ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்களின் வரிசையில் பாவல் நகவகீதன் விரைவில் இணைவார் என்பது உறுதி.

Related News

7658

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery