தொலைக்காட்சியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம்!
Sunday August-01 2021

கொரோனா பரவல் காரணமாக திரையரங்கங்கள் மூடப்பட்டிருப்பதால், பல படங்கள் ஒடிடி-யில் வெளியாகி வருகிறது. அதேபோல், சில படங்கள் நேரடியாக தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ‘திட்டம் இரண்டு’ படம் கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஒடிடியில் வெளியான நிலையில், அவருடைய மற்றொரு புதிய படமான ‘பூமிகா’ நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது.

 

ஸ்டோன் பென்ஞ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பூமிகா’. ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் விஜய் தொலைக்காட்சியில் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

திகில் திரில்லர் ஜானர் திரைப்படமான இப்படம் குறித்து படத்தின் இயக்குநர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் கூறுகையில், “இன்றைய காலகட்டத்தில் மக்களை  சென்றடையும் தளத்தில் திரைப்படத்தை வெளியிடுவது மிக முக்கியம். விஜய் டிவி பிரீமியர் மூலம் நிச்சயம் எண்ணற்ற மக்களை இப்படம் சென்றடையும். ஒரு படம் அதிக ரசிகர்களை சென்றடைவதே படைப்பாளியின் இறுதி நோக்கமாகும். ஐஸ்வர்யா ராஜேஷ் முதலான, நட்சத்திர நடிகர்களின் நடிப்பால், அற்புதமான படைப்பாக உருவாகியுள்ள,  இந்த படத்தினை கண்டிப்பாக ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். என்றார்.

 

ஐஸ்வர்யா ராஜேஷுடன், பாவல் நவகீதன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள்ள இப்படத்திற்கு ரொபேர்ட்டோ சஷ்ஷாரா (Roberto Zazzara) ஒளிப்பதிவு செய்துள்ளார். பிருத்வி சந்திரசேகர் இசையமைக்க, ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பு செய்துள்ளார். 

Related News

7661

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery