நேரடியாக ஒடிடியில் வெளியாகும் சூர்யாவின் 4 படங்கள்!
Thursday August-05 2021

கொரோனா பாதிப்பால் திரையரங்கங்கள் மூடப்பட்டிருக்கிறது. இதனால், புதிய திரைப்படங்களை நேரடியாக ஒடிடி-யில் வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைப்பதால், முன்னணி நடிகர்களும் தங்களுடைய படங்களை ஒடிடியில் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் 2டி தயாரிப்பில் உருவாகியுள்ள ’ஜெய் பீம்’, ‘உடன்பிறப்பே’, ‘ஓ மை டாக்’, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ ஆகிய நான்கு படங்கள் நேரடியாக அமேசான் ஒடிடி-யில் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

 

த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தில் சூர்யா முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். அவருடன், பிரகாஷ்ராஜ், ரமேஷ் ராவ், லிஜாமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் மணி கண்டன் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

இயக்குநர் சசிகுமார், ஜோதிகா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘உடன்பிறப்பே’ குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ், சித்து ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை இரா.சரவணன் இயக்கியுள்ளார்.

 

அறிமுக இயக்குநர் சரோவ் சண்முகம் இயக்கியிருக்கும் ‘ஓ மை டாக்’ சிறுவர்களுக்கான படமாக உருவாகியுள்ளது. இதில், அருண் விஜய் மற்றும் அவருடைய மகன் அர்ணவ் விஜய், அவருடைய தந்தையும் பிரபல நடிகருமான விஜயகுமார், மகிமா நம்பியார், வினை ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

அரிசில் மூர்த்தி இயக்கியிருக்கும் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ நையாண்டி நகைச்சுவையை மையப்படுத்திய திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில், ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

Surya 4 Movie

 

வெவ்வேறு பாணியில் உருவாகியுள்ள இந்த நான்கு படங்களும், செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, ஒரு மாதத்திற்கு ஒரு படமாக வெளியாக உள்ளது.

Related News

7667

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery