தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நடிகர் சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே சிம்புவிடம் இருந்து தனக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும், என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். அவரைப் போலவே வேறு சில தயாரிப்பாளர்களிடம் சிம்பு பணம் பெற்று பல வருடங்களாகியும் அது குறித்து இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் இருப்பதால், சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சனை தீர்வுகாண முடிவு செய்த தயாரிப்பாளர்கள் சங்கம், அதற்காக சிம்புவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
மேலும், இந்த பிரச்சனையில் தீர்வு ஏற்படும் வரை சிம்புவின் புதிய படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி மறுத்ததோடு, பெப்சி ஊழியர்கள் சிம்பு படப்பிடிப்பில் பங்கேற்க கூடாது, என்றும் கேட்டுக்கொண்டது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கை படி, பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, சிம்பு படப்பிடிப்பில் பெப்ஸி ஊழியர்கள் பங்கேற்க கூடாது என்று உத்தரவிட்டார். இதனால், சிம்புவின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த ‘நதிகளில் நீராடும் சூரியன்’ படத்தின் தலைப்பு திடீரென ‘வெந்து தணிந்தது காடு’ என்று மாற்றம் செய்யப்பட்டதோடு, படப்பிடிப்பும் தொடங்கப்பட்டு விட்டது.
இந்த தகவல் அறிந்த தயாரிப்பாளர்கள் சங்கம் ரொம்பவே அப்செட்டாகிவிட்டதாம். விசாரித்ததில், பெப்ஸி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணியை, ‘வெந்து தணிந்தது காடு’ தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தனியாக கவனித்ததால், ஆர்.கே.செல்வமணி படப்பிடிப்பு நடத்த அனுமதியளித்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், ஒரு தனி நபருக்கு விலை போன ஆர்.கே.செல்வமணி தலைவராக இருக்கும் வரை பெப்சி அமைப்புடன் எந்த விதமான பேச்சுவார்த்தையிலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பங்கேற்காது என்று முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...