தனது படங்களை பிரம்மாண்டமாக காட்டுவதற்காக தேவையில்லாத செலவுகள் மூலம் தயாரிப்பாளராக பெரும் நஷ்ட்டங்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன், இனி தான் நடிக்கும் படங்களை தயாரிக்கப் போவதில்லை, என்ற முடிவுக்கு வந்திருப்பதோடு, பிற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அதன்படி, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அவர் நடித்த ‘டாக்டர்’ படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், மற்றொரு படமான ‘அயலன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கணினி பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பும் முடியும் நிலையில் உள்ளது.
இதற்கிடையே மீண்டும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். அசோக் என்ற அறிமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ஒரு படத்தை தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். மற்றொரு படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிக்கிறார்.
இந்த இரண்டு படங்களின் இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...