தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்பர் ஒன் நிகழ்ச்சியாக உருவெடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்குபெறுபவர்கள் மக்களிடம் பிரபலமாவதோடு, திரைப்பட வாய்ப்புகளும் கிடைப்பதால், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பலர் ஆர்வம் காட்டி வந்த நிலையில், தற்போது சூழல் எதிர்மறையாகி விட்டதாக கூறப்படுகிறது.
இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது. ஆனால், முதல் மற்றும் இரண்டாவது சீசனைப் போல் மூன்றாவது மற்றும் நான்காவது சீசன் இல்லை என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சி மீது மக்களுக்கு இருந்த ஆர்வமும் குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ரசிகர்கள் நிலை இப்படி என்றால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்பதிலும் பலர் தயக்கம் காட்டுகிறார்களாம். பிக் பாஸ் குழுவில் இருந்து பேசுகிறோம், என்றதுமே பலர் அலறியடித்து தெறித்து ஓடிவிடுகிறார்களாம்.
காரணம், கடந்த இரண்டு சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டவர்கள் துறை ரீதியாக எந்த முன்னேற்றமும் பெறாத நிலையில், சர்ச்சைகளிலும் சிக்கிவிட்டார்களாம். இதற்கு காரணம் பிக் பாஸ் ராசி தான், என்று சிலர் கிளப்பிவிட தற்போது அதை ஒட்டு மொத்த கோடம்பாக்கமே நம்பி விட்டதாம்.
இதனால் தான், பிக் பாஸ் குழுவில் இருந்து அழைப்பு வந்தாலே பலர் அலறுகிறார்களாம். அதனால், இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய சுவாரஸ்யம் இருக்காது, என்று கூறுகிறார்கள்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...