அனைத்து பெருமையும் நயன்தாராவையே சேரும் - இயக்குநர் பாராட்டு
Saturday August-14 2021

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான ‘நெற்றிக்கண்’ நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

 

பிளைண்ட் என்ற கொரியன் படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தை மிலிந்த் ராவ் இயக்க, இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் கிராஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

 

மக்களிடம் படம் வரவேற்பு பெற்றது குறித்து இயக்குநர் மிலிந்த் ராவ் கூறுகையில், ”எங்கள் திரைப்படத்திற்கு இது வரையிலும் கிடைத்து வரும், அற்புதமான வரவேற்பு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இதன் அனைத்து பெருமையும் நயன்தாரா அவர்களையே சேரும். இப்படத்தில் அவரது உழைப்பு, நம்பமுடியாத அளவு பிரமிப்பானதாக இருந்தது. அவர் இப்படத்தில்  ஒரு பார்வையற்ற நபராக நடிப்பதால், பார்வையற்றோரிடமிருந்து அவர்களின் அனுமதியுடன் நாங்கள் நிறைய குறிப்புகளைப் பெற்று, அதை படத்தில் பயன்படுத்தினோம். தயாரிப்பாளராக இருந்தபோதிலும், நயன்தாரா மேடம் இந்த வேடத்துடன் பொருந்துகிறாரா என்று  சோதனை படப்பிடிப்பை நடத்த விரும்பினார் அதன் படி அவரை வைத்து டெஸ்ட் ஷூட் செய்தோம். அவர் உடல்மொழி பார்வையற்ற ஒருவரை போலவே இருந்தது. மேலும் அவர் இப்பாத்திரத்தில் மேக்கப்பே இல்லாமல் நடித்துள்ளார். இத்தனை பெரிய பிரபலமாக இருந்தாலும் இந்த கதாப்பாத்திரத்திற்கு அவர் தந்த உழைப்பு அபாரமானது. மிக கச்சிதமாக, நுணுக்கத்துடன் இந்த பாத்திரத்தை அவர் செய்துள்ளார். 

 

பார்வையற்ற பாத்திரம் என்றவுடனேயே இந்த பாத்திரம் எல்லாப்படத்தையும் போல,  கருப்பு கண்ணாடி மாட்டி நடமாடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். கண்கள் தான் உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவி. அதனை முழுதாக வெளிப்படுத்த வேண்டும், என்பதில் உறுதியாக இருந்தோம். படப்பிபிடிப்பில் எளிதாக கவனம் சிதறும் ஆனால் அனைத்து தடைகளையும் உடைத்து, நயன்தாரா அவர்கள் கண் தெரியாத ஒருவரை திரையில் அற்புதமாக கொண்டு வந்திருக்கிறார். படத்தில் இந்த பாத்திரம்  இரண்டு முக்கியமான  நிலைகளை கடந்து செல்லும். முதலில் அவருடைய  கண் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பார்வையில்லாத அதிர்ச்சியைக் கடந்து செல்லும். அப்போது மிக பலவீனமான நிலையில் இருக்கும். அந்த நிலையை கடந்து அமைதியான  நிலையை அந்த பாத்திரம் அடையும். நீண்ட பொதுமுடக்கம் முடிந்த பிறகு நாங்கள் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்தபோது, 'இதுவும் கடந்து போகும்' பாடலுக்காக, அவர் அதிக எடையைக் குறைத்ததைக் கண்டு, ஒட்டுமொத்த குழுவும் வியந்தது.  

 

மக்கள் அவரை லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடுவது அவருக்கு பொருத்தமே. இப்படத்தில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. படத்தில் அனைவரது பங்களிப்பும், ’நெற்றிக்கண்’ படத்தை அருமையான படைப்பாக மாற்றியுள்ளது.” என்றார்.

Related News

7677

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery