இந்திய சுதந்திரத்திற்கு போராடிய, மறக்கப்பட்ட வரலாற்று நாயகர்களின் கதையை சொல்லும் திரைப்படமாக ‘ஆஸாத் ஹிந்து’ என்ற தொடர் உருவாக உள்ளது. பல திரைப்படங்களை உள்ளடக்கிய இத்தொடரின் முதல் திரைப்படத்தின் அறிவிப்பு, 75 வது சுதந்திரதின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
’வீராங்கனை துர்காவதி தேவி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை ‘83’ மற்றும் ‘தலைவி’ ஆகிய படங்களை தயாரித்து வரும் விஷ்ணு வர்தன் இந்தூரி தயாரிக்கிறார்.
சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்ட, மறக்கப்பட்ட ’வீராங்கனை துர்காவதி தேவி’ என அழைக்கப்பட்ட துர்கா பாபியின் வாழ்க்கையை திரைக்கு எடுத்து வரவுள்ளது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயே அரசுக்கு எதிராக, பகத் சிங் மற்றும் சந்திரசேகர ஆஸாத் போன்ற வீரர்களுக்கு, சுதந்திரத்திற்கு முழு அர்ப்பணிப்புடன் போராட தூண்டுகோலாக அமைந்த வீராங்கனை அவர்.
ஆங்கிலேய உளவு நிறுவனமான MI5 வீராங்கனை துர்காவதியை ‘இந்தியாவின் அக்னி’ என்று அழைத்தது குறிப்பிடத்தக்கது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...