நடிகரும், விஜேவுமான ஆனந்த கண்ணன் மரணம்!
Tuesday August-17 2021

90-களில் பிரபலமாக இருந்த தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் ஆனந்த கண்ணனை யாராலும் மறக்க முடியாது. சன் மியூச்க் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய ஆனந்த கண்ணன், சிங்கப்பூரில் வாழும் தமிழர் ஆவார். சிங்கப்பூரின் முன்னணி தமிழ் தொலைக்காட்சியான வசந்தம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய ஆனந்த கண்ணன், சென்னை வந்ததும், சன் மியூக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

 

தமிழக ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளராக வலம் வந்த ஆனந்த கண்ணன், பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களிலும் நடிக்க தொடங்கினார். பிறகு வெங்கட் பிரபு இயக்க சரோஜா படத்திலும் நடித்தவர், சில படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். ஆனால், அந்த படங்கள் வெளியாகவில்லை.

 

இதற்கிடையே, சினிமா வாய்ப்பு குறைந்ததால் மீண்டும் சிங்கப்பூருக்கு சென்ற ஆனந்த கண்ணன், மீண்டும் வசந்தம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியதோடு, தான் கற்றுக்கொண்ட கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமிய களைகளை பிறருக்கு கற்றுக்கொடுப்பதற்காக ‘ஆனந்தக் கூத்து’ என்ற பயிற்சி பள்ளியை தொடங்கி நடத்தி வந்தார்.

 

இந்த நிலையில், ஆனந்த கண்ணன் உயிரிழந்துவிட்டதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, அவருடைய இரப்பு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், அவருடைய மரணத்திற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

 

ஆனந்த கண்ணன் கேன்சரால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த சில மாதங்களாகவே அவருடைய உடல் நிலை மிக மோசமடைந்த நிலையில், அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Related News

7683

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery