‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஆர்யாவின் குருவாக நடித்து பாராட்டு பெற்ற பசுபதி, புதிய படம் ஒன்றில் நாயகனாக நடிக்கிறார். அவருடன் ரோகிணி, அம்மு அபிராமி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை கார்த்தியின் ‘சர்கார்’ படத்தை தயாரித்து வரும் எஸ்.லஷ்மன் குமார், தனது பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.
ராம் சங்கையா கதை எழுதி இயக்கும் இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். சிவ நந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் பாடல் பதிவு இன்று பூஜையுடன் தொடங்கியது. படப்பிடிப்பு மற்றும் படத்தில் நடிக்க இருக்கும் பிற நடிகர், நடிகைகள் பற்றி விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளனர்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...