அறிமுக இயக்குநர் விக்டர் இம்மானுவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘மரபு’. இது மரபுசார் பண்புகளை மறந்து அற்பமான விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம். எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.
இதில் விக்டருக்கு ஜோடியாக இலக்கியா நடிக்க, வில்லனாக ஆனந்த பாபு நடிக்கிறார். நாயகியின் அம்மாவாக ’கருத்தம்மா’ ராஜஸ்ரீ நடிக்கிறார்.
இந்தப் படத்தில் அனுபவமுள்ள பிரபல தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு அதற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளன. இந்தப்படத்தை தியேட்டர், ஓ.டி.டி. என்று பல தளங்களில் வெளியிட முடிவு செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதோடு, பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...