பிரபல திரைப்பட நடிகை ’நல்லெண்ணெய்’ சித்ரா, உயிரிழந்தார். அவருக்கு வயது 56.
மலையாளம் சினிமா மூலம் நடிகையாக அறிமுகமான சித்ரா, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கதாநாயகி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் சித்ரா, மோகன்லால், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
இவர் நடித்த்ஹ நல்லெண்ணெய் விளம்பர படம் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதால், இவரை தமிழ் ரசிகர்கள் ‘நெல்லெண்ணெய்’ சித்ரா என்றும் அழைப்பார்கள்.
இந்த நிலையில், நடிகை சித்ரா மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருடைய உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
2020 ஆம் ஆண்டு வெளியான ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா’ படத்தில் நாயகனுக்கு அம்மாவாக நடித்திருந்தார். மேலும் கிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் ‘பெல்பாட்டம்’ என்ற படம் அவர் கடைசியாக நடித்த படமாகும்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...