இயக்குநர் பாண்டிராஜுக்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு!
Tuesday August-24 2021

’பசங்க’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பாராட்டு பெற்ற பாண்டிராஜ், முதல் படத்திலேயே சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றார். அப்படத்தை தொடர்ந்து சில தோல்விப் படங்களை இயக்கி கோலிவுட்டில் காணாமல் போனவர், பிறகு ‘மெரினா’ என்ற படத்தின் மூலம் கமர்ஷியல் ரூட்டில் பயணிக்க தொடங்கியவர் மீண்டும் கோலிவுட்டில் தொடர்ந்து படங்கள் இயக்கும் இயக்குநராகியிருப்பதோடு, கல்லா கட்டும் இயக்குநராகவும் உயர்ந்துள்ளார்.

 

தற்போது சூர்யாவை வைத்து ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தை இயக்கி வரும் பாண்டிஜ்ராஜுக்கு சூப்பரான வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குநர் பாண்டிராஜுக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், அவருடைய அடுத்த படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தா’ பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும், அந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

 

அனால், தேசிங்கு பெரியசாமி சொன்ன கதையை படமக்கா வேண்டும் என்றால் மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படுகிறதாம். ரஜினிகாந்தின் சம்பளம் மற்றும் படத்தின் செலவு இரண்டையும் சேர்த்தால், படத்திற்கான வியாபாரத்தை காட்டிலும் செலவு பல மடங்கு அதிகமாக இருக்கிறதாம். அதனால், ரஜினிகாந்த் படத்தை தயாரிப்பதில் இருந்து ஏஜிஎஸ் நிறுவனம் பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியின் அடுத்த படத்தையும் தயாரிக்க முன் வந்திருக்கிறதாம். ஆனால், அந்த படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் பாண்டிராஜுக்கு கொடுக்க வேண்டும், என்று ரஜினியின் கோரிக்கை வைத்துள்ளதாம். கதையை கேட்ட ரஜினியும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Rajinikanth

 

ஆக, ரஜினிகாந்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு பாண்டிராஜுக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், இதில் திடீர் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

Related News

7698

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery