சந்தீப் கிஷன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘மைக்கேல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகிறது.
ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடிக்க, முக்கியமான வேடம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
விஜய் சேதுபதி நடித்த ‘புரியாத புதிர்’, ‘ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ விரைவில் வெளியாக உள்ள ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்க, நாராயண் தாஸ் கே நரங் வழங்குகிறார். இந்த நிறுவனம் தற்போது இயக்குநர் சேகர் கம்முலா மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில், தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் தயாராகும் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய முழு விபரத்தை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளனர்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...