துவாராக ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம் ‘கதிர்’. அறிமுக இயக்குநர் தினேஷ் பழனிவேல் இயக்கும் இப்படத்தில் வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்க, பாவ்யா ட்ரிகா கதாநாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் பிரதாப் மற்றும் பிரபல மலையாள நடிகை ரஜினி சாண்டி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
பிரபல மலையாள இசையமைப்பாளர் பிரஷாந்த் பிள்ளை இசையமைக்கும் இப்படத்திற்கு ஜெயந்த் சேது ஒளிப்பதிவு செய்கிறார்.
கிராமத்திலிருந்து நகர வாழ்க்கைக்கு செல்லும் கதாநாயகன் நகர ஓட்டத்திற்க்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறி நிற்க்கிறான். அங்கே அவன் தங்கும் வீட்டின் வயதான உரிமையாளரான பாட்டியை சந்தித்த பின்பு அவன் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதே ‘கதிர்’ படத்தின் கதை.
“நாம வாழ்றது முக்கியமில்ல… யாருக்காக வாழறோம்ங்கிறது தான் முக்கியம்” என்ற தத்துவத்தை முன்னிருத்தும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...