விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கண்டெண்ட் குரூப் இணைந்து தயாரித்திருக்கும் வெப் சீரிஸுக்கு ‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 120 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸின் முதல் 5 தொடர்கள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் முதல் விகடன் டெலிவிஸ்டாஸ் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம், தாங்கள் தயாரித்து பெரும்பான்மையான பெண் பார்வையாளர்களை கவர்ந்த ‘வல்லமை தாராயோ’ வெப் சீரிஸின் வெற்றியை தொடர்ந்து, முற்றிலும் புதிய கதையம்சத்துடன் குறிப்பாக 2K கிட்ஸ் மற்றும் அவர்களது பொழுதுபோக்கு அம்சங்களை குறிவைத்து இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ளது.
ஆறு பிளாட்டுகளில் அருகருகே வசிக்கும் நண்பர்கள் தங்களது வாழ்க்கையில் சந்திக்கும் ஏற்ற இறக்கங்கள், பெற்றோருடான நிலைப்பாடு, நட்பு, காதல் சிக்கல்கள் மற்றும் தங்களது பலநாள் கனவுகளை நிறைவேற்ற அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என எல்லாம் கலந்த ஒரு கலவையான வெப் சீரிஸாக இது உருவாகியுள்ளது.
ராஜீவ் கே.பிரசாத் இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸின் திரைக்கதையை வே.கி.அமிர்தராஜ் மற்றும் ஜோ ஜார்ஜ் இருவரும் எழுதியுள்ளனர். இந்த டிஜிட்டல் டெய்லி சீரிஸின் டைட்டில் பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...