குறுகிய காலத்தில் பிரபலமான சின்னத்திரை நடிகைகளில் சித்ராவும் ஒருவர். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் மூலை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த சித்ரா, தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி படிபடியாக முன்னேறினார்.
சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக உருவெடுத்தவர், திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கிய நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துக் கொண்டார்.
சித்ராவின் தற்கொலை சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியதோடு, அவருடைய தற்கொலையின் பின்னணியாக பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தற்போது அதன் மர்மம் விலகவில்லை.
இந்த நிலையில், சித்ரா பற்றிய ஒரு செய்தி மீண்டும் வைரலாகி வருகிறது. அதாவது, சித்ரா நாயகியாக நடித்த திரைப்படம் ‘கால்ஸ்’ அவர் மரணமடைந்த பிறகு வெளியான இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், விரைவில் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த தகவலை சித்ராவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...