‘காதல் கொண்டேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான சோனியா அகர்வால், அப்படத்தை தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்ததோடு, ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் திகழ்ந்தார். பிறகு இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு நடிப்பு முழுக்கு போட்டுவிட்டார்.
பிறகு செல்வராகவனிடம் இருந்து விவாகரத்து பெற்றவர் மீண்டும் நடிக்க தொடங்கினார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்தவர், தற்போது சீரியலிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை சோனியா அகர்வால் வீட்டில் கஞ்சா வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில், அவர் வீட்டில் 40 கிராம் கஞ்சா கண்டெடுக்கப்பட்டதாகவும், இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ததாக தகவல் வெளியாக, கோலிவுட்டே அதிர்ச்சியடைந்தது.
ஆனால், உண்மையில் நடிகை சோனியா அகர்வால் கைது செய்யப்படவில்லை. மேலும், கன்னட நடிகை சோனியா அகர்வால் தான் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பற்றிய செய்தியில் தமிழ் நடிகை சோனியா அகர்வாலின் புகைப்படத்தை போட்டு சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இந்த தகவல் அறிந்ததும் கோபமடைந்த நடிகை சோனியா அகர்வால், தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்ததோடு, தன்னைப் பற்றி தவறான செய்தி வெளியிடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன், என்றும் எச்சரித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...