விஷாலை வைத்து படம் தயாரிக்கும் நடிகர்கள்!
Wednesday September-01 2021

’எனிமி’ மற்றும் ‘வீரமே வாகை சூடும்’ ஆகிய படங்களை முடித்துள்ள விஷாலின், புதிய படம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாலின் 32 வது திரைப்படமாக உருவாகும் இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.

 

அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்திற்கு பொன் பார்த்திபன், ஏ.வினோத்குமார் வசனம் எழுதுகின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் ராணா புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்கள். 

 

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். இப்படம் சுனைனாவின் சினிமா வாழ்வில் முக முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Related News

7707

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery