நடிகர் சிலம்பரசன் மற்றும் அவரைப் பற்றிய எந்த தகவலாக இருந்தாலும் வைரலாகி விடும். காரணம் அந்த அளவுக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை கொண்டிருக்கிறார். இதை நிரூபிக்கும் வகையில், தரமான சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்திருக்கிறது.
‘மாநாடு’ படத்தை முடித்த சிலம்பரசன், கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். அப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு தொடங்கியதுமே, எப்போதும் போல் எதிர்ப்பு கிளம்ப, அதை எப்போதும் போல அசால்டாக எதிர்கொண்ட சிலம்பரசன், தற்போது அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவிட்டு, அப்படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, சோசியல் மீடியா என்று சொல்லப்படும் சமூக வலைதளப் பக்கத்தில் பல வருடங்களாக ஆக்டிவாக இருக்கும் நடிகர்களை ஓரம் கட்டும் அளவுக்கு சிம்புவின் சோசியல் மீடியா வருகை அமைந்திருப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஆம், நடிகர், நடிகைகள் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய சில மாதங்களிலேயே சிலம்பரசனை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், குறைந்த நாட்களில் அதிக பின்தொடர்பவர்களை பெற்ற தமிழ் நடிகர் என்ற பெருமையை சிம்பு பெற்றுள்ளார்.
சிலம்பரசன் எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் வெற்றி தான், என்பதை நிரூபிக்கும் வகையில், சோசியல் மீடியா தளத்தில் அவர் இறங்கியதுமே அத்தளத்தையே தெறிக்கவிட்டு, அவருக்கு புதிய பெருமை கிடைக்க செய்த ரசிகர்கள் கூட்டம் இருக்கும் வரை, சிம்பு எத்தனை பிரச்சனை வந்தாலும் அதை மிக சுலபமாக எதிர்கொள்வார், என்று கோலிவுட்டில் பேசப்படுகிறதாம்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...