நான்கு மொழிகளில் உருவாகும் வரலட்சுமி சரத்குமாரின் புதிய படம்!
Thursday September-02 2021

கதாநாயகிய, வில்லி மற்றும் கதாநாயகியை மையப்படுத்திய படங்கள் என பலதரப்பட்ட வேடங்களில் தொடர்ந்து நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ‘ரோக்’ பட புகழ் இஷான் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் ’தத்வமசி’.

 

ஆர்.இ.எஸ் எண்டர்டெயின்மெண்ட் எல்.எல்.பி நிறுவனம் சார்பில் ராதாகிருஷ்ணா தெலு தயாரிக்கும் இப்படத்தின் மோசன் போஸ்டர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

 

படத்தின் தலைப்பான ‘தத்வமசி’-யின் அர்த்தம் என்னவென்றால், ’நான் தான் அது’ எனும் பொருளுடைய அத்வைத பாரம்பரியத்திலிருக்கும் ஒரு சமஸ்கிருத மந்திரமாகும்.பண்டைய இந்து நூலான உபநிஷத்தில் இருக்கும் நான்கு மகாவாக்கியங்களில் தத்வமசி ஒன்றாகும். இது பிரம்மனுடன் ஆத்மாவின் ஒற்றுமையைக் குறிக்கப் பயன்படுகிறது. 

 

தலைப்பு குறிப்பிடுவது போல, தத்வமசி ஒரு தனித்துவமான கதைக்களத்துடன் கூடிய பிரம்மாண்ட படமாக இருக்கும். தலைப்பைப் போலவே கான்செப்ட் போஸ்டரும் சுவாரசியமாக உள்ளது. குண்டலி (ஜாதகம்) போன்று லோகோவில் இரத்த அடையாளங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மோஷன் போஸ்டர் ‘தத்வமசி’ படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை அளிக்கிறது. “மனிதகுல வரலாற்றில் இதுவரை இல்லாத சக்தி, எல்லையற்ற உணர்ச்சி,பழிவாங்கலின் உச்சத்திற்கு சாட்சியாக இருங்கள்” என்று மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ள ஆங்கில வரிகள் கூறுகின்றன. மோஷன் போஸ்டருக்கான சாம் சி.எஸ்-ன் விறுவிறுப்பான இசை படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்கிறது.

 

Thathvamasi

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஹரிஷ் உத்தமன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

 

ஷ்யாம் கே.நாயுடு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க, மார்த்தாண்ட் கே.வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, சந்திரபோஸ் பாடல்கள் எழுதுகிறார்.

 

இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

7709

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery