க்ரைம் ஆக்‌ஷன் படத்தில் இணையும் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ்
Wednesday September-08 2021

கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், முதல் முறையாக நடிகர் அர்ஜுனுடன் இணைந்து நடிக்கிறார். க்ரைம் ஆக்‌ஷன் ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை தினேஷ் லக்‌ஷ்மணன் இயக்க, ஜி.எஸ் ஆர்ட்ஸ் சார்பில் ஜி.அருள்குமார் தயாரிக்கிறார். 

 

அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் பிரவீன் ராஜா, பிராங்க் ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பரத் ஆசீவகன் இசையமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்ய, அருண் சங்கர் துரை கலையை நிர்மாணிக்கிறார். விக்கு சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

 

Arjun and Aishwarya Rajesh

 

வித்தியாசமான க்ரைம் திரில்லர் ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் அருள்குமார் கூறுகையில், “இது ஒரு க்ரைம்-த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்  இப்படத்தில் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இது மன இறுக்கம் கொண்ட  ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரத்தை  மையமாக கொண்ட  திரைப்படம். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,  அவரது கதாபாத்திரத்திம் படத்தில் மிகவும் முக்கியத்துவம் மிகுந்த கதாப்பாத்திரமாகும். இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் திரைக்கதையை முதன்முதலில்  விவரித்த போது, நான் பார்வையாளராக மிகவும் ரசித்தேன். திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கும்  பார்வையாளர்களுக்கு, நீண்ட காலத்திற்குப் பிறகு க்ரைம்-த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் வகைகளில் ஒரு புதிய அனுபவத்தை இப்படம் தரும். நடிகர் அர்ஜுன் இந்த வகையைச் சேர்ந்த திரைப்படங்களில் அதிகம் நடித்திருந்தாலும்,   இப்படம் அதிலிருந்து மாறுபட்டு, தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.” என்றார்.

Related News

7720

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery