ஹரி இயக்கத்தில் அருண்விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு
Friday September-10 2021

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படத்திற்கு ‘யானை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

அருண் விஜயின் 33 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் பஸ்ட் லுக்கை தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் என மொத்தம் 33 பிரபலங்கள் வெளியிட்டனர்.

 

தமிழின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து மிகப்பெரிய வெற்றிப்படங்களை தந்த இயக்குநர் ஹரி, தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் அருண் விஜய் முதல் முறையாக நடிக்கும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரிபா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, ராதிகா, யோகி பாபு, கே.ஜி.எப் புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

Yaanai

 

கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் நடந்து முடிந்த நிலையில், தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் தூத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

 

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, அனல் அரசு சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

Related News

7722

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery