இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை’ மற்றும் ‘அரண்மனை 2’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், ‘அரண்மனை 3’ மிகப்பெரிய பொருட்ச் செலவில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது.
ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் யோகி பாபு, சாக்ஷி அகர்வால், விவேக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
வரும் அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாக உள்ள ‘அரண்மனை 3’ படத்தின் அனைத்து உரிமைகளையும் நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. அப்போது, இயக்குநர் சுந்தர்.சி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி, கலைஞர் தொலைக்காட்சி சி.எப்.ஓ எஸ்.கார்த்திகேயன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி சி.ராஜா, பென்ஸ் மீடியா சி.இ.ஓ ஆர்.மதன்குமார் ஆகியோர் இருந்தனர்.
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...
’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...
VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...